Tamil Cinema News
ஜிவி பிரகாஷை அவமானப்படுத்திய அனிரூத்?.. திட்டமிட்டு செய்யப்பட்டதா?.
தமிழில் பெரிய ஹீரோக்கள் திரைப்படம் என்றாலே அதற்கு இசையமைக்கும் இசையமைப்பாளராக அனிருத் மாறி இருக்கிறார் பெரும்பாலும் இப்பொழுது மற்ற இசையமைப்பாளர்களுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது.
அதற்கு முக்கிய காரணம் அனிருத் இசையமைத்தார். கண்டிப்பாக அந்த திரைப்படத்தில் இரண்டிலிருந்து மூன்று பாடல்கள் பெரிய ஹிட் கொடுத்துவிடும். அந்த பாடல்களை படத்திற்கு பெரிய விளம்பரத்தை பெற்று கொடுத்துவிடும்.
உதாரணத்திற்கு வேட்டையன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதிலிருந்து வெளியான மனசிலாயோ பாடல் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதுவே அந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்தது. சொல்ல போனால் வேட்டையன் திரைப்படத்திற்கு பெரிதாக விளம்பரம் கூட அதுவரை செய்யவில்லை.
அனிரூத் செய்த காரியம்:
இந்த மாதிரியான காரணங்களால் அனிருத் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனாலும் அனிருத்துக்கு போட்டி போடும் அளவிற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாசும் தொடர்ந்து வெற்றி பாடல்களை கொடுத்து வருகிறார்.
முக்கியமாக மெலோடி பாடல்களில் ஜிவி பிரகாஷ் தொடர்ந்து அனிருத்தை விடவுமே சிறப்பாக கொடுத்து வருகிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி இருப்பதாக கூறப்பட்டது. அது உண்மை என்கிற வகையில் அனிருத் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அமரன். அமரன் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் தற்சமயம் நல்ல வெற்றியை பெற்று வருகிறது.
இதிலும் இந்த படத்திலும் ஒரு காதல் பாடல் வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த நிலையில் பட குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து அனிருத் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் படத்தில் பணிபுரிந்த பலரது பெயரையும் குறிப்பிட்ட அனிருத், ஜிவி பிரகாஷின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.
எனவே வெளிப்படையாகவே இவர்கள் இருவருக்கும் இடையே போட்டியிருப்பது தெரிகிறது என்று ரசிகர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.