Cinema History
மதவெறியில் செஞ்ச செயல்!. ஏ.ஆர் ரகுமான் சீக்ரெட்டுகளை போட்டு உடைத்த பயில்வான் ரங்கநாதன்!. இவ்வளவு நாள் பாட்டு கேட்டும் இது தெரியலையே!..
தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். கருநாடக சங்கீதம் தமிழ் சினிமாவில் அதிகமாக பழக்கத்தில் இருந்தப்போது அதை மாற்றி வெளிநாட்டு இசைகள் பலவற்றையும் தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்தார் ஏ.ஆர் ரகுமான்.
அதற்கு முன்பு இருந்த இசையமைப்பாளர்களின் இசையில் இருந்து முற்றிலுமாக மாறுப்பட்டு இருந்தது ஏ.ஆர் ரகுமானின் இசை. அதனால்தான் அவரை இசைப்புயல் என்கிறோம். இப்படி பல பெருமைகளை பெற்றவராக இருந்தும் கூட ஏ.ஆர் ரகுமான் ஒரு சில எதிர்மறையான விஷயங்களையும் செய்துள்ளார்.
அவற்றை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் ஒரு இஸ்லாமியர் என்பது பலரும் அறிந்த விஷயமே. ஆனால் அந்த மத நம்பிக்கைகளை தனது தொழிலிலும் ஈடுப்படுத்தியுள்ளார் ஏ.ஆர் ரகுமான். பாய்ஸ் திரைப்படத்திற்கு அவர் இசையமைக்கும்போது அதில் ஐயப்பன் பாடல் ஒன்றிற்கு இசையமைக்க வேண்டும் என கேட்டுள்ளார் ஷங்கர்.
அப்போது அல்லாஹ்வை தவிர வேறு எந்த கடவுளுக்கும் இசையமைக்க முடியாது என மறுத்துவிட்டாராம் ஏ.ஆர் ரகுமான். இந்த நிலையில் அந்த ஒரு பாடலை மட்டும் வேறு இசையமைப்பாளரை வைத்து இசையமைத்துள்ளனர். அதே போல எஸ்.ஜே சூர்யா தெலுங்கில் பவண் கல்யாணை கதாநாயகனாக வைத்து கோமரம் புலி என்கிற திரைப்படத்தை இயக்கினார். அதில் ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பாளராக பணிப்புரிந்தார்.
அந்த திரைப்படத்திலும் ஒரு ஐயப்பன் பாடல் இடம்பெற்றது. அதற்கும் இசையமைக்க மறுத்துவிட்டாராம் ஏ.ஆர் ரகுமான். இதுக்கூட பரவாயில்லை. நியூ திரைப்படத்தில் காலையில் தினமும் என்கிற அம்மா பாடலுக்கு முதலில் வரிகள் எழுதியப்போது “காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தெய்வம் அம்மா” என இருந்துள்ளது.
இந்த நிலையில் அதற்கும் இசையமைக்க முடியாது என மறுத்துள்ளார் ஏ.ஆர் ரகுமான். இந்த நிலையில் அந்த பாடல் வரிகளை ” காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொடும் தேவதை அம்மா” என பாடல் வரிகளை மாற்றி அமைத்துள்ளனர். இப்படி தனது பாடல் இசையமைப்பில் கூட மதவெறியை காட்டியுள்ளார் ஏ.ஆர் ரகுமான் என்கிறார் பயில்வான் ரங்கநாதன்:
Source: Link
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்