தமிழ் சினிமாவில் எப்போதுமே தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடித்தாலே அந்த திரைப்படம் முக்கால்வாசி வெற்றி பெறும் என்று மக்கள் மத்தியில் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கை உண்டு.
அதனால்தான் 70 வயதிற்கு மேல் ஆகியும் கூட இன்னமும் கதாநாயகனாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவிலேயே பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலகட்டங்களில் துவங்கி கலர் சினிமா, 3 டி சினிமா, அனிமேஷன் என இதுவரை சினிமாவில் வந்த அனைத்து தொழில்நுட்பங்களிலும் நடித்தவர் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே.
நடிகர் ரஜினிகாந்த் தனக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டாரா என்று பல இயக்குனர்கள் அப்போது போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அனுபவம் வாய்ந்த இயக்குனர்களுக்கு மட்டுமே ரஜினிகாந்த் அப்போது வாய்ப்பளித்து வந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த வெளியான பாபா திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது.

பாபா திரைப்படம் வெளியான அதே சமயத்தில் சில நாட்கள் கழித்து மாதவன் நடித்த ரன் என்கிற திரைப்படம் வெளியானது. ரன் திரைப்படத்தை லிங்குசாமி தான் இயக்கினார். பாபா திரைப்படத்தை ஓரம் கட்டி விட்டு ரன் திரைப்படம் பெரும் வெற்றியை கண்டது.
இந்த விஷயத்தை அறிந்தார் ரஜினிகாந்த் ரன் திரைப்படத்தை போய் பார்த்தார். பார்த்தவுடன் ரஜினிக்கும் ரன் படம் மிகவும் பிடித்து விட்டது உடனே அவர் லிங்குசாமியை அழைத்தார். லிங்குசாமியை நேரில் சந்தித்த ரஜினி எனக்கும் இதே போல ஒரு கதை இருக்கிறதா? ஏனெனில் இந்த திரைப்படம் மிக சிறப்பாக இருந்தது என கூறி இருக்கிறார்.
ஆனால் லிங்குசாமி இடம் அப்போது எந்த கதையும் கைவசம் இல்லை இதனை அடுத்து தன்னிடம் கதை எதுவும் இல்லை என்று கை விரித்து இருக்கிறார் லிங்குசாமி. இதனால் ரஜினி மூலம் படம் எடுக்கும் பொன்னான வாய்ப்பை இழந்தார் லிங்குசாமி. வாய்ப்பு என்பது சினிமாவில் மிக முக்கியம் அதை தவற விட்டு விட்டால் பெரும் இழப்பை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதற்கு லிங்குசாமி ஒரு உதாரணமாக அமைந்தார்.






