Connect with us

கதையும் ரெடி… ஹீரோவும் ரெடி… பணம் தான் இல்ல! புலம்பிய பிரபல இயக்குனர்!

mohan G

News

கதையும் ரெடி… ஹீரோவும் ரெடி… பணம் தான் இல்ல! புலம்பிய பிரபல இயக்குனர்!

Social Media Bar

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஒருவர் ஓராண்டாக சும்மாவே இருப்பதாகவும், 4 கதை ரெடியா இருக்கு, ஹீரோவும் ரெடி, படம் எடுக்க பணம் தான் இல்லை எனவும்  வீடியோ ஒன்றில் புலம்பி உள்ளார்.

பழைய வண்ணார்பேட்டை படத்தின் மூலம்  இயகுனராக அறிமுகம் ஆன மோகன் ஜி, திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இருந்தும் இதற்கு ஆதரவு தெரிவிக்க ஒரு கூட்டமே இருக்கத் தான்  செய்தது. 

அந்த ஆதரவில், அடுத்து ரிச்சர்ட் நடிப்பில் வெளிவந்த ருத்ரதாண்டவம் என்ற படத்தை இயக்க, அந்த படமும் பல சர்ச்சைகளை எழுப்பியது. கடைசியாக செல்வராகவனை வைத்து பகாசூரன் படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் விமர்சனத்தை சந்தித்தது. இருந்தும் மீண்டும் தனது ட்விட்டரில், திரௌபதி 2? ருத்ரதாண்டவம் 2? என பதிவிட்டு இருந்தார்.

தற்போது அந்த பதிவு குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம் நான் ட்விட்டரில் திரௌபதி 2 பண்ணலாமா ருத்ரதாண்டவம் 2 பண்ணலாமா என்று கேட்டு இருந்தேன். இதற்கு பலர் திரௌபதி 2 பண்ணுங்க எனவும் சிலர் புதுசா படம் எடுங்க என்றும் நான் வேணும்னா கதை தருகிறேன் என்று போட்டு இருந்தார்கள். ட்விட்டரில் ஒரே கதறலாக உள்ளது. திரௌபதி படத்திற்கும் ருத்ரதாண்டவத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. 

இரண்டு கதையை யோசித்து வைத்து இருந்தேன். ஒரு  கதையில் ஒரு பெரிய நடிகரை நடிக்க திட்டம் போட்டோம். அது தான் தாமதத்திற்கு காரணம். அடுத்து இரண்டாவதாக காசிமேட்டில் காசி விஸ்வநாதர் கோவில் மூழ்கிவிட்டதாக ஒரு கதை இருக்கு அது குறித்தும் ஆராய்ச்சி நடத்தி வருகிறோம்.இப்படி நான்கு கதைகள் கைவசம் இருக்கு, இதற்கான ஹீரோக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், பிரச்சனை என்ன வென்றால் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தேர்தல் முடியட்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த பிரச்சனையால் தான் படம் தாமதமாகிக் கொண்டு இருக்கிறது என விளக்கமளித்துள்ளார். 

மேலும், புதுசா கதை இல்லையா என கேட்டவர்களுக்கு இந்த வீடியோ பதிலாக இருக்கும் என்று மோகன் ஜி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அதாவது ஜி கைவசம் நிறைய கதை இருக்கிறது என சுட்டிகாட்டியுள்ளார். 

To Top