Connect with us

உதவி இயக்குனரோடு காதலா!.. திருமணத்திற்கு தயாராகும் இயக்குனர் ஷங்கரின் மகள்!..

aishwarya shankar engagement

News

உதவி இயக்குனரோடு காதலா!.. திருமணத்திற்கு தயாராகும் இயக்குனர் ஷங்கரின் மகள்!..

Social Media Bar

Shankar Daughter: தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். அவரது முதல் படத்தில் துவங்கி பல படங்களுக்கு தொடர்ந்து வரவேற்புகள் இருந்து வந்தன.

அதில் ஜீன்ஸ், இந்தியன், முதல்வன் போன்ற திரைப்படங்கள் பெரும் அளவில் வெற்றியை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படங்களாகும். இந்த நிலையில் இவ்வளவு படங்கள் இயக்கிய பிறகும் கூட இயக்குனர் ஷங்கர் தொட முடியாத ஒரு உயரத்தை தற்சமயம் உள்ள இயக்குனர்கள் வெகு விரைவாக பெற்றுவிடுகின்றனர்.

உதாரணத்திற்கு கூற வேண்டுமென்றால் தற்சமயம் இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஷங்கரை விட குறைவான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் கூட அவருக்கான வாய்ப்பு என்பது தற்சமயம் அதிகமாக இருக்கிறது. சம்பள அளவிலும் தற்சமயம் இயக்குனர் சங்கரை விட அதிகமாக சம்பளம் வாங்குகிறார்.

மிக தாமதமாக நான் ஷங்கரின் மகளான அதிதி சங்கர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். முதன்முதலாக விருமன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார் அதிதி சங்கர். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தும் திரைப்படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் என்கிற திரைப்படத்தில் நடித்தார் அதிதி சங்கர். அதைத் தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது சகோதரியான ஐஸ்வர்யா சங்கருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் தற்சமயம் நடந்திருக்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோகித்தை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா சங்கர். அதில் அப்போது பல பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் அந்த திருமண வாழ்க்கை வெகு நாட்கள் நீடிக்கவில்லை ரோகித் அப்பொழுது போக்சோ வழக்கில் கைதானது தான் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

போக்சோ என்பது குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான ஒரு சட்டமாகும். இந்த நிலையில் போக்சோ வழக்கில் கைதான நபருடன் வாழ முடியாது என்று அவரை விட்டு பிரிந்து விட்டார் ஐஸ்வர்யா சங்கர்.

இந்நிலையில் தற்சமயம் அவருக்கு இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தருண் கார்த்திகேயன் என்பருடன் காதல் ஏற்பட்டதாக பேச்சுக்கள் இருந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் தற்சமயம் நிச்சயதார்த்தம் ஏற்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள்தான் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

To Top