Cinema History
எனக்கு நீ ஓசில ஒன்னும் கொடுக்க வேண்டாம்!.. ரஜினியிடம் மூஞ்சில் அடித்தாற் போல பேசிய இயக்குனர்…
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை தக்க வைத்து கொண்டிருக்கும் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் என்றாலே ப்ளாக் பஸ்டர் ஹிட்டுதான் என்கிற அளவிற்கு தமிழ் சினிமாவில் பெரும் மார்க்கெட்டை வைத்திருப்பவர் ரஜினிகாந்த்.
சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டத்தில் பலருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவராக ரஜினிகாந்த் இருந்தார். படத்தில் பணிப்புரியும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளில் துவங்கி பலருக்கும் அவர் உதவியுள்ளார். ஆரம்பத்தில் அவரது திரைப்படங்கள் சில வெளியாகி பெரிதாக வெற்றி பெறாமல் போயின.
அருணாச்சலம் திரைப்படம் படமாக்கி கொண்டிருந்த காலக்கட்டத்தில் தன்னால் நஷ்டமடைந்த தயாரிப்பாளருக்கு அந்த படத்தில் வரும் பணத்தை பிரித்து அளிக்க வேண்டும் என முடிவு செய்தார் ரஜினிகாந்த். இதற்காக 7 பேரை அவர் வரிசைப்படுத்தினார்.
அதில் பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஸ்ரீதரும் இருந்தார். பொதுவாக இயக்குனர் ஸ்ரீதர் யாரிடமும் உதவிகளே வாங்க மாட்டார். இருந்தாலும் ரஜினிகாந்த் அவருக்கு உதவி செய்ய நினைத்தார். எனவே ஸ்ரீதரை சந்தித்து அருணாச்சலம் படத்தில் வரும் பணத்தை கொடுக்க இருக்கிறேன். உங்களுக்கும் அதில் பங்குண்டு எனக் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
அதை கேட்டு கோபமான ஸ்ரீதர், மற்றவர்கள் உதவி செய்து வாழ வேண்டிய அளவிற்கு எனக்கு இன்னமும் மோசமாகவில்லை, எனக்கு நீ இனாமாக எதுவும் கொடுக்க தேவையில்லை என கூறியுள்ளார். இந்த நிகழ்வை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
