Connect with us

அந்த கமல் படத்தை எடுத்ததால எனக்கு இழப்புகள்தான் அதிகம்!.. மேடையில் மனம் வருந்திய இயக்குனர்!..

kamalhaasan-1

Cinema History

அந்த கமல் படத்தை எடுத்ததால எனக்கு இழப்புகள்தான் அதிகம்!.. மேடையில் மனம் வருந்திய இயக்குனர்!..

Social Media Bar

Actor Kamalhaasan: தமிழ் சினிமாவிற்குள் மாற்று சினிமாவை கொண்டு வரவேண்டும் என நினைத்த நடிகர்களில் நடிகர் கமல்ஹாசன் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் தொடர்ந்து ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் நாட்கள் செல்ல செல்ல தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான திரைப்படங்களே வந்துக்கொண்டுள்ளன என்பதை புரிந்துக்கொண்டார்.

எனவே புது ரக திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களை தேடி சென்று அவர்களது திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் அன்பே சிவம். சுந்தர் சி மிகவும் கஷ்டப்பட்டு புதிதாக எழுதிய ஒரு கதை அன்பே சிவம். அதுவரை தமிழ் சினிமாவில் அப்படியான திரைப்படங்கள் வரவில்லை என்றே கூறலாம்.

ஆனால் பொதுவாக புது வித திரைப்படங்கள் முதலில் பெரிதாக வரவேற்பை பெறாது. அதே நிலைதான் அன்பே சிவம் திரைப்படத்திற்கும் நடந்தது. அந்த திரைப்படம் அப்போது பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ஒரு பேட்டியில் இயக்குனர் சுந்தர் சியிடம் நீங்கள் இயக்கிய திரைப்படங்களிலேயே சிறப்பான திரைப்படம் அன்பே சிவம் திரைப்படம்தான்.

ஆனால் அது போன்ற திரைப்படத்தை மீண்டும் எடுக்கவே இல்லையே ஏன் என கேட்டனர். அதற்கு பதிலளித்த சுந்தர் சி அந்த படத்தை எடுத்ததால் கிடைத்த பெருமைகளை விடவும் இழப்புகள்தான் எனக்கு அதிகம். அந்த படம் தோல்வியடைந்ததால் எனக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் சினிமாவில் வாய்ப்புகளே கிடைக்காமல் இருந்தேன். என்னை பார்க்கும் பலரும் அன்பே சிவம் திரைப்படத்தை கொண்டாடி பேசுவார்கள். அவர்கள் எல்லோரும் திரைப்படம் வெளியானப்போது அதற்கு ஆதரவு கொடுத்திருந்தால் நானும் தொடர்ந்து அந்த மாதிரியான திரைப்படங்களை எடுத்திருப்பேன் என கூறினார் சுந்தர் சி.

To Top