மொத்தம் 20 அவார்ட்!.. கின்னஸ் சாதனை!.. உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழ் சினிமா!.. பெரும் சம்பவமா இருக்கே!..

ஒவ்வொரு சினிமாவிலும் சாதனைகளை படைப்பதற்காகவே நிறைய திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு தமிழில் இயக்குனர் பார்த்திபன் எப்போதும் அந்த மாதிரியான முயற்சிகளை எடுத்துள்ளார். ஒத்த செருப்பு என்கிற திரைப்படத்தில் ஒரே கதாபாத்திரத்தை மட்டும் வைத்து மொத்த படத்தையும் கொண்டு சென்றிருப்பார்.

அதே போல இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் இயக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த நிலையில் லாவண்யா என்னும் பெண் பார்த்திபனை தாண்டி பெரும் சாதனை ஒன்றை செய்திருக்கிறார். சினிமாவில் பல்வேறு துறையில் பணிப்புரிவது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

Social Media Bar

பெரும்பாலும் ஒரு திரைப்படத்தை ஒரே நபரே தயாரித்து, நடித்து, இயக்கியிருப்பதை பார்க்க முடியும். ஆனால் லாவண்யா தன்னுடைய திரைப்படமான பேய் கொட்டு என்னும் திரைப்படம் சார்பாக 31 துறைகளிலும் பணியாற்றி இருக்கிறார்.

இதற்கு முன்பு ஒரு திரைப்படத்தில் 24 கிராஃப்டுகளில் பணிப்புரிவது என்பதுதான் அதிகப்பட்ச உலக சாதனையாக இருந்தது. ஆனால் அதையும் தாண்டி லாவண்யா சென்ஸார் ஸ்க்ரிப்ட், 5.1 மிக்ஸ், சவுண்ட் இஞ்சினியரிங், சப்டைட்டில் உள்ளிட்ட பல துறைகளை கற்றுக்கொண்டு தனி ஆளாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்.

இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நடுவே கின்னஸ் உலக சாதனையை மட்டுமின்றி கீழ்க்கண்ட பல சாதனைகளை படைத்துள்ளது இந்த திரைப்படம்.

Book Of World Records Usa (Usa, Uk, India, Canada, Philippines,)

World Book Of Records, (Ur)

World Achievers Book (Ur)

Influencer Book Of World Records (Ur)

India’s World Records (India)

Lnicorn World Records (Ur)

Kalam’s World Record

Sigaram Awards 2023 From Director K.Bhagyaraj Sir

London Book Of World Records For Covering 31 departments

London Book Of World Records För Best Director & Actor

London Book Of World Records Best Music Director & Playback Singer