ஏ.வி.எம் ஸ்டூடியோவையே அசர வைத்த கமல் –  கமலுக்கு சான்ஸ் எப்படி கிடைத்தது தெரியுமா?

உலக நாயகன் என தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படும் தமிழின் மாபெரும் நடிகர் கமல்ஹாசன். சிறு வயது முதலே சினிமாவில் இருக்கும் கமல்ஹாசனுக்கு முதல் படம் களத்தூர் கண்ணம்மா என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அந்த படத்தில் அவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது? என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

அதை ஏ.வி.எம் சரவணன் ஒரு பேட்டியில் கூறுகிறார்.

ஏற்கனவே களத்தூர் கண்ணம்மா திரைப்படத்திற்கு ஆட்கள் எல்லாம் தேர்ந்தெடுத்து படப்பிடிப்பு துவங்கிவிட்டது. கண்களின் வார்த்தைகள் புரியாதோ என்ற பாடலின் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கும் சமயம்.

அப்போது ஏ.வி.ஏம் குடும்பத்தாரின் மருத்துவர் ஒரு சிறுவனை அழைத்து வருகிறார். வீட்டில் அனைவரும் மருத்துவரிடம் பேச அந்த சிறுவன் கோபமாக வராண்டாவிலேயே நின்று கொண்டுள்ளான். அதை பார்த்த வீட்டார் மருத்துவரிடம் “யார் இந்த பையன் ஏன் இப்படி சோகமாக நிற்கிறான்” என கேட்க “அந்த பையன் ஏ.வி.எம் செட்டியாரை பார்க்க வேண்டும் என்றான். அதற்காகதான் அழைத்து வந்தேன். இப்போது அவனை அவரிடம் அழைத்து செல்லவில்லை என கோபமாக இருக்கிறான்” என மருத்துவர் கூறியுள்ளார்.

உடனே அந்த சிறுவனை அழைத்துக்கொண்டு ஏ.வி.எம் செட்டியாரிடம் செல்கிறார் ஏ.வி.எம் சரவணன். 

அந்த சிறுவனை பார்த்த ஏ.வி.எம் செட்டியார். நடித்து காட்ட சொல்கிறார். சிறுவன் அதி அற்புதமாக நடிக்க ஏ.வி.எம் செட்டியாரே ஆச்சரியப்பட்டு போகிறார். அந்த சிறுவன் தான் கமல்.

உடனே ஏ.வி.எம் சரவணனிடம் தற்சமயம் களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க இருக்கும் சிறுவனுக்கு பதிலாக கமலை நடிக்க வைக்க சொல்கிறார். இப்படிதான் கமலுக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது. இதை கமலும் கூட ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Refresh