Cinema History
நான் நடிகையாகுறதுக்கு எங்க வீட்ல ஒத்துக்கல – சினேகாவின் நினைவுகள்
நடிகை சினேகா தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு கதாநாயகி ஆவார். 90ஸ்களில் பலருக்கும் பிடித்த ஒரு கதாநாயகியாக சினேகா இருந்துள்ளார்.

இதுவரை 80க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு சில நடிகைகள் மட்டுமே தமிழ்நாட்டில் பிறந்து கோலிவுட்டில் நடிகை ஆகியுள்ளனர். சினேகாவும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என பலரும் நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் அல்ல.
சினிமாவிற்கு அவ்வளவு எளிதில் சினேகா வந்துவிடவில்லை. சின்ன திரையில் ப்ரோகிராம் செய்துக்கொண்டிருந்த சினேகாவிற்கு எதிர்பாராத விதமாகதான் திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்தது.
அவர்கள் வீட்டில் சினேகாவிற்கு எதிர்ப்பே வந்தது. சினிமாவில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு சினேகாவின் சகோதரியே சினேகாவிற்கு திரைத்துறைக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
அதே போல சினேகா நடித்த முதல் திரைப்படம் பாலிவுட் திரைப்படமாகும். நிஷாஹனே பஷி என்கிற திரைப்படத்தில்தான் இவருக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது.
