அஜித்துக்கு இப்ப கமல், ரஜினி உதவி தேவை!.. விடாமுயற்சிக்காக களம் இறங்கிய நடிகர்கள்!.

தமிழில் பெரும் பட்ஜெட்டில் திரைப்படம் தயாரிக்கும் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக லைக்கா நிறுவனம் இருந்து வருகிறது. லைக்கா நிறுவனம் லண்டனில் பெரும் தொழிலதிபராக உள்ள சுபாஸ்கரன் என்பவரால் நடத்தப்படும் நிறுவனமாகும்.

இதனால் மற்ற தயாரிப்பு நிறுவனங்களை காட்டிலும் கொஞ்சம் காசு அதிகமாக உள்ள நிறுவனமாக லைக்கா நிறுவனம் இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் பெரிய ஹீரோக்கள் படங்களை கையில் எடுத்தால் சிக்கல்தான் ஆகும் என்பதை தாமதமாகதான் லைக்கா நிறுவனம் புரிந்துக்கொண்டுள்ளது.

வரிசையாக கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3, ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன், அஜித் நடிப்பில் விடாமுயற்சி ஆகிய நான்கு படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வந்தது லைக்கா நிறுவனம். பொதுவாகவே இயக்குனர் ஷங்கர் எவ்வளவு செலவு செய்யக்கூடியவர் என்பது பலரும் அறிந்த விஷயமே.

Social Media Bar

இந்த நிலையில் அதிக படங்களை கையில் எடுத்ததால் நிதி நெருக்கடியில் சிக்கியது லைக்கா நிறுவனம். எனவே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை சிறிது நாட்கள் நிறுத்தி வைக்க முடிவு செய்தது லைக்கா நிறுவனம். ஆனால் வருகிற ஜூன் மாதம் முதல் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு நடிக்க செல்ல இருக்கிறேன்.

அதற்குள் என்னை வைத்து படப்பிடிப்பை முடிக்க முடித்து கொள்ளுங்கள் என கூறிவிட்டார் அஜித். இதனை தொடர்ந்து இந்தியன் 2 மற்றும் வேட்டையன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது லைக்கா நிறுவனம்.

இதன் மூலம் படம் வெளியாவதற்கு முன்பே படத்திற்கான ஓ.டி.டி, சாட்டிலைட் போன்ற உரிமைகள் விற்பனையாகும். அதை வைத்து விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிடலாம் என திட்டமிட்டு இந்த இரண்டு ஹீரோக்கள் படத்தையும் களம் இறக்கியுள்ளது லைக்கா நிறுவனம்.