Connect with us

மலையாள பொறுக்கிகள்… வன்மம் கக்கிய ஜெயமோகனின் மூளை புளித்த மாவு… இயக்குநர் லெனின் பாரதி காட்டம்!

jeyamogan -lelin bharathi

News

மலையாள பொறுக்கிகள்… வன்மம் கக்கிய ஜெயமோகனின் மூளை புளித்த மாவு… இயக்குநர் லெனின் பாரதி காட்டம்!

Social Media Bar

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனின் மூளை புளித்த மாவு என தெரிவித்துள்ளார் இயக்குநர் லெனின் பாரதி. 

மலையாள மொழியில் வெளியாகி, தமிழ்நாட்டில் சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். கடந்த 22 ஆம் தேதி வெளியான இந்தக படத்தை இயக்குனர் சிதம்பரம் இயக்க, செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். 

இந்த நிலையில்,  குடிகார பொறுக்கிகளை ஜாலியனாவர்கள் போன்று காட்டியிருப்பதாகவும், மஞ்சும்மல் பாய்ஸ் தனக்கு எரிச்சலூட்டும் படமாக உள்ளது எனவும்  எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்திருந்தார்.  தமிழ் சினிமா ஹீரோ எந்த பொறுக்கியிடம் இருந்து சாமானியர்களை காப்பாற்றுவாரோ அந்த பொறுக்கி தான் மலையாள படங்களின் ஹீரோ என்றும் கூறியிருந்தார். 

ஜெயமோகனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை படத்தை இயக்கிய லெனின் பாரதி தனது எக்ஸ் தளத்தில் ஜெயமோகனின் கருத்திற்கு விமர்சனம் தெரிவித்துள்ளார். 

அதில், ஜெயமோகன் அவர்களே., உங்கள் ஒட்டுமொத்த மூளையும் புளித்த மாவு என்றால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருக்கிறது “கேரள பொறுக்கிகள்” “மலையாள குடிகாரப் பொறுக்கிகள்” என்று நீங்கள் கக்கியிருக்கும் இனவெறுப்பு மற்றும் வன்மம் புளித்து பொங்கும் வக்கிர வார்த்தைகள்.. என தெரிவித்துள்ளார்.


லெனினின் இந்த விமர்சனத்திற்கு ஒருபுறம் ஆதரவும் மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.  தமிழில் சரியான படங்கள் வரவில்லை. அதனால் தான் மஞ்ஞும்மல் பாய்ஸ் போன்ற படத்தை எல்லாம் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் ஒரு சிலரும் ஜெயமோகன் சொல்வதிலும் நியாயம் இருக்கத் தானே செய்கிறது என மறு சிலரும் தங்கள் கருத்துகளை கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.

To Top