இன்னும் ஓயலையா இந்த மஞ்சுமல் பாய்ஸ் வசூல்.. இப்போ வரை எவ்வளவு வசூல் தெரியுமா?.. ஷாக் கொடுத்த நிலவரம்!.
Manjummel Boys : மலையாள சினிமாவில் இருந்து தமிழில் ஒரு திரைப்படம் இவ்வளவு வெற்றி பெற முடியுமா என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறது மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம்.
கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த 10 இளைஞர்களின் கதைதான் மஞ்சும்மள் பாய்ஸ். இந்த 10 இளைஞர்களும் கொடைக்கானலில் குணா குகையை சுற்றி பார்க்க செல்லும் பொழுது அதில் ஒரு நபர் மட்டும் குழிக்குள் சென்று மாட்டிக்கொள்ள அவரைக் காப்பாற்ற அவரது நண்பர்கள் செய்யும் செயலே கதையாக உள்ளது.

2006 இல் உண்மையாகவே நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதாலேயே இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் திரைப்படத்தில் முழுக்க முழுக்க கமல் நடித்த குணா திரைப்படத்தின் பாடல்களும் இடம் பெற்றிருந்தன.
அதேபோல் படத்தின் வசனங்களும் முழுக்க முழுக்க தமிழில் இருந்ததால் தமிழ் மக்களுக்கு பிடித்த படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் அமைந்துவிட்டது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் தமிழில் கொண்டாடப்படும் ஒரு திரைப்படமாக மாறியது.
படம் வெளியாகி இரண்டு வாரங்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது இது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனெனில் இந்த திரைப்படம் மொத்தமே 15 கோடிக்குதான் எடுக்கப்பட்டது அப்படி இருக்கும் பொழுது 100 கோடி ரூபாய் என்பது பெரிய வசூல் என்று அனைவரும் ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றுவரை மொத்தமாக சேர்த்து 165 கோடி வசூல் செய்திருக்கிறது இந்த திரைப்படம் இன்னமும் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.