Connect with us

நீ அந்த படம் நடிக்கிறவதானே.. உனக்கு எதுக்கு இந்த வேலை! – மியா கலீஃபாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

mia khalifa

Tamil Cinema News

நீ அந்த படம் நடிக்கிறவதானே.. உனக்கு எதுக்கு இந்த வேலை! – மியா கலீஃபாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

Social Media Bar

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பதிவிட்ட பிரபல போர்ன் நடிகை மியா கலீஃபாவை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல காலமாக பிரச்சினை இருந்து வரும் நிலையில் தற்போது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் குழுவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் குழுவினருக்கு ஈரான், அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பிரபல போர்ன் நடிகையான மியா கலீஃபா தனது எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பதிவுகளை இட்டு வருகிறார். அமெரிக்காவை சேர்ந்த கைலி ஜென்னர் என்ற பெண் பிரபலம் தான் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்து பதிவிட்ட மியா கலீஃபா “உண்மையான பத்திரிகை இருந்தால், கைலி ஜென்னருடன் பேசும் அடுத்த நபர் மத்திய கிழக்கில் உள்ள புவிசார் அரசியல் பதட்டங்கள் குறித்து அவளது கருத்தைக் கேட்பார். தனது 400 மில்லியன் ஃபாலோவர்களுக்கு கண்மூடித்தனமான கருத்துகளை சொல்ல மாட்டார்” என்று கூறியிருந்தார்.

அவரது இந்த பதிவில் நுழைந்த இஸ்ரேல் ஆதரவாளர்கள் பலர் மியாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மியாவின் பாலஸ்தீன ஆதரவு பதிவால் அவருடனான வணிக ஒப்பந்தத்தை டோட் ஷாப்பிரோ என்ற கனடிய ரேடியோ ஒலிபரப்பாளர் முறித்துக் கொண்டுள்ளார்.

இதற்கு பதிலடியாக அவரை திட்டியும் மியா பதிவுகளை இட்டு வரும் நிலையில், ‘போர்ன் படம் நடிக்கும் உங்களுக்கு இந்த அரசியல் எல்லாம் தேவைதானா?’ என்ற ரீதியில் பலரும் அவரை விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

To Top