இந்த பாட்ட பாடுனது எஞ்சாயி எஞ்சாமி பொண்ணா? – ட்ரெண்டாகும் நானி பாடல்!

தெலுங்கு ஹீரோக்களில் ஓரளவு தமிழிலும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் நானி. ராஜமெளலி இயக்கத்தில் வெளியான நான் ஈ திரைப்படம் மூலமாக இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு அவர் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வந்தது.

அதில் ஜெர்சி, சியாம் சிங்கா ராய் போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. தற்சமயம் நானி தசரா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக தயாராகி வருகிறது.

கிட்டத்தட்ட புஷ்பா படத்தில் வரும் கதாநாயகனை போன்ற தோற்றத்தில் நானி காணப்ப்டுகிறார். இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Social Media Bar

இந்நிலையில் படத்தில் வரும் மைனரு வேட்டி கட்டி என்கிற பாடல் வெளியானது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணனின் மகளான தீ பாடியுள்ளார். கூடவே அனிரூத்தும் பாடியுள்ளார். தற்சமயம் இந்த பாடல் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்த பாடலை கேட்க இங்கு க்ளிக் செய்யவும்