கனெக்ட் படம் எப்படி இருக்கு – நயன்தாரா கனெக்ட் திரைப்பட விமர்சனம்

தமிழில் ஹாரர் திரைப்பட இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். இவர் இயக்கும் திரைப்படங்கள் யாவும் பயங்கரமான ஹாரர் திரைப்படங்களாகவும் அதே சமயம் தமிழில் நல்ல ஹிட் கொடுத்த படங்களாகவும் உள்ளன.

மாயா, கேம் ஓவர் வரிசையில் தற்சமயம் இவர் இயக்கி வெளியாகியிருக்கும் திரைப்படம் கனெக்ட். ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான அளவில் இந்த படம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

லாக்டவுன் சமயத்தில் நடப்பது போன்ற கதைகளத்தை கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் காரணத்தால் தனி தனியாக வெவ்வேறு நாடுகளில் வசித்து வரும் குடும்ப உறுப்பினர்கள்.

இந்த சமயத்தில் அவர்களுக்கு நடக்கும் ஹாரர் விஷயங்கள். இதை அடிப்படையாக கொண்டே கனெக்ட் திரைப்படத்தின் திரைக்கதை செல்கிறது.

அது மட்டுமின்றி படத்தின் மொத்த நேரமே 99 நிமிடங்களே உள்ளன. மேலும் படத்தில் இடைவேளையே கிடையாது என கூறப்படுகிறது. படத்தின் நடுவில் இடைவேளை விடுவது படத்தின் சுவாரஸ்யத்தை குறைத்துவிடும் என்பதால் இந்த படத்தில் இடைவேளை என்பதே இல்லை என கூறப்படுகிறது.

இன்று படம் வெளியான நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Refresh