Connect with us

பீஸ்ட் ஓடாமல் போனதுக்கு சன் பிக்சர்ஸ்தான் காரணம்!.. வெளிப்படையாக கூறிய படக்குழுவினர்!..

rajini vijay

Cinema History

பீஸ்ட் ஓடாமல் போனதுக்கு சன் பிக்சர்ஸ்தான் காரணம்!.. வெளிப்படையாக கூறிய படக்குழுவினர்!..

Social Media Bar

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகனுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜமான விஷயமாகும். ஏனெனில் வெற்றி படம் மட்டுமே நடித்த நடிகர் என எவருமே சினிமாவில் கிடையாது, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என அனைவருமே தோல்வி படங்களும் கொடுத்துள்ளனர்.

அப்படியாக நடிகர் விஜய்க்கு சமீபத்தில் பெரும் தோல்வி படமாக அமைந்த திரைப்படம் பீஸ்ட். பீஸ்ட் திரைப்படம் அதிக விமர்சனத்துக்குள்ளானது, முக்கியமாக படத்தின் க்ளைமேக்ஸை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிவிட்டனர்.

இதில் விஜய்யை விடவும் இயக்குனர் நெல்சன் அதிகமாக விமர்சனத்துக்குள்ளானார். ஆனால் அதற்கு பிறகு நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. இதுக்குறித்து நெல்சனுடன் வேலை பார்த்த ஒருவர் பேட்டியில் கூறும்போது சன் பிக்சர்ஸ்தான் பீஸ்ட் படத்தின் தோல்விக்கு காரணம் என கூறுகிறார்.

ஏனெனில் பீஸ்ட் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிக்காக வெகுவாக ப்ளான் செய்து வைத்திருந்தார் நெல்சன். ஆனால் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடிக்க வேண்டி இருந்ததால் அந்த படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டி இருந்தது.

எனவே அவசர அவசரமாக க்ளைமேக்ஸ் காட்சிகளை எடுத்தார். அது மக்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் ஜெயிலர் படத்தில் தெளிவாக நாட்கள் எடுத்துக்கொண்டு படத்தை சரியாக எடுத்து முடித்துள்ளார் என அவர் தெரிவித்தார்.

To Top