News
ஷாருக்கானுக்கு போட்டியாக களம் இறங்கும் கே.ஜி.எஃப் குழு!.. சலார் ரிலீஸ் தேதி அறிவிப்பு!..
ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்கும் திரைப்படங்களில் அதிகமான படங்களை கொண்ட சினிமாவாக தென்னிந்திய சினிமா உள்ளது. அதிலும் முக்கியமாக திடீரென கன்னட சினிமா பெரிதாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
அமைதியாக இருந்த கன்னட சினிமாவை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியது கே.ஜி.எப் திரைப்படம். இது மிகக் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரும் லாபத்தை ஈட்டிய படமாகும். கே.ஜி.எப் முதல் பாகம் வந்த பொழுது ரசிகர் மத்தியில் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை.
ஆனால் இரண்டாம் பாகம் வந்த பொழுது ஆயிரம் கோடியை தாண்டி அது வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்து இயக்கி வரும் திரைப்படம் சலார். இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
கே.ஜி.எஃப் படத்தின் தொடர்ச்சியாகவே இந்த கதை இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி சலார் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
ஆனால் அதே நாளில் ஷாருக்கான் நடிக்கும் டங்கி என்கிற திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இருந்தாலும் அதே தேதியை சலார் குழு தேர்ந்தெடுத்து இருப்பதன் மூலம் ஷாருக்கானுடன் நேரடியாக போட்டியில் இறங்கி உள்ளனர் என்பது தெரிகிறது.
