Latest News
சிம்ரன் பிரகாஷ்ராஜ் நிலமைதான் உனக்கும், தலைகணத்துல ஆடாத – அசோக் செல்வனுக்கு பிரபலம் கொடுத்த வார்னீங்!.
தற்பொழுது சினிமாவில் சில நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் அந்த நடிகர்களின் சம்பளம் இரண்டிலிருந்து மூன்று மடங்கு உயர்ந்துவிடும் என்பது அனைவரும் அறிந்து ஒன்றுதான். மேலும் ஒரு படம் முழுமையாக முடிந்து விட்டது என்றால் அந்த படம் வெளியிடுவதற்கு முன்பே அதற்கான இசை வெளியீட்டு விழா, பட பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடக்கும்.
இந்த நிகழ்ச்சியில் படக்குழுவை சார்ந்த அனைவரும் கலந்து கொள்வார்கள். நடிகர், நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர்கள், இசையமைப்பாளர் என அனைவரும் கலந்து கொண்டு படத்தை பிரமோஷன் செய்வார்கள்.
தற்பொழுது அசோக்செல்வன் நடிப்பில் திரைக்கு வெளியாக காத்திருக்கும் படம் தான் “எமக்கு தொழில் ரொமான்ஸ்” படம். இந்த படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சிக்கு நடிகர் அசோக் செல்வன் வராததை கண்டித்தும் அவர் தயாரிப்பாளருக்கு கொடுத்த நெருக்கடி பற்றியும் தயாரிப்பாளர் கே ராஜன் கோபமாக தகவல்களை பகிர்ந்து உள்ளார் அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
எமக்குத் தொழில் ரொமான்ஸ் படம்
கடந்த 4ஆண்டுகளாக அசோக்செல்வன் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் தற்பொழுது திரைக்கு வர காத்திருக்கிறது. மேலும் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குரான பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். மேலும் தயாரிப்பாளராக திருமலை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அவந்திகா நடித்திருக்கிறார்.
![ashok selvan](https://cinepettai.com/wp-content/uploads/2024/07/ashok-selvan-1.jpg)
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, மேலும் பலர் கலந்து கொண்டார்கள். ஆனால் இந்நிகழ்ச்சியில் நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை அவந்திகா இருவரும் வரவில்லை. நடிகர் அசோக்செல்வன் இந்த படத்திற்கு வராததை குறித்தும் அவர் தயாரிப்பாளருக்கு கொடுத்த நெருக்கடியை பற்றியும் கே ராஜன் பகிர்ந்துள்ளார்.
கே. ராஜன் காட்டம்
இந்நிலையில் இசை வெளியீடு விழா நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு கூட வர முடியாத அளவிற்கு பிஸியாக உள்ளாரா அசோக் செல்வன் என்றும், டப்பிங் பேசுவதற்கு முன்பாகவே தயாரிப்பாளரிடம் நிதி சார்ந்த நெருக்கடிகளை அவர் கொடுத்திருக்கிறார் என கூறியுள்ளார்.
மேலும் இவ்வாறு நிதி நெருக்கடி கொடுக்கிறார் என்றால் இது அசோக் செல்வனுக்கு அசிங்கமாக இல்லையா? என அவர் கோபமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். தயாரிப்பாளர்கள் என்ன அடிமையா இதையெல்லாம் ஏன் தயாரிப்புகள் சங்கம் கேட்பது இல்லை என கூறியுள்ளார். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இல்லையென்றால் நடிகர்கள் இல்லை என எச்சரித்தார்.
மேலும் ஒருமுறை ஆந்திராவில் படப்பிடிப்பில் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை சிம்ரன் பணத்தை வாங்கிவிட்டு அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு செல்லாமல் வேறு ஒரு படப்பிடிப்பிற்கு சென்றதால் தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுத்தது. இதனால் அவர்களால் எந்த ஒரு படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும் அவர்கள் அபராதம் செலுத்திய பின்பு தான் ஷூட்டிங் சென்றுள்ளார்கள்.
எனவே தயாரிப்பாளரை வேதனைப்படுத்திய எந்த ஒரு ஹீரோவாக இருந்தாலும் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும் என கே. ராஜன் கோபமாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
![](https://cinepettai.com/wp-content/uploads/2023/10/logolow-4.png)