Connect with us

அஜித்தால் எல்லாத்தையும் இழந்து நின்ன பிரபு!.. கை கொடுத்த நடிகர் ரஜினி.. இது தெரியாம போச்சே!.

asal film.

News

அஜித்தால் எல்லாத்தையும் இழந்து நின்ன பிரபு!.. கை கொடுத்த நடிகர் ரஜினி.. இது தெரியாம போச்சே!.

Social Media Bar

Actor Prabhu: தமிழ் சினிமாவில் 80ஸ் காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். அதிலும் இவர் நடித்த சின்னத்தம்பி படம் தற்போது வரை அனைவராலும் மறக்க முடியாத ஒரு திரைப்படமாக இவருக்கு அமைந்ததுள்ளது. இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் என்ற திரைப்பட விருது கொடுக்கப்பட்டது.

அஜித்தை வைத்து தயாரித்த திரைப்படம்

தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் ஒரு நடிகராக உள்ளார். இவரின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அந்த வகையில் நடிகர் பிரபு நடிகர் அஜித்தை வைத்து தனது சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அசல்.

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை, இயக்குனர் சரண் இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக சமீரா ரெட்டி, பாவனா மற்றும் பிரபு ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள்.

asal ajith

இயக்குனர் சரண், காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் போன்ற வெற்றி படங்களை கொடுத்ததால் அசல் திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

மேலும் இயக்குனர் சரண் அஜித் நடிப்பில் வெளியான வில்லன் திரைப்படத்திற்கு கதை எழுதியவர் ஆவார். எனவே அசல் திரைப்படமும் ரசிகர்களின் மத்தியில் கொண்டாடப்படும் என்ற நம்பிக்கை இருந்ததால் நடிகர் பிரபு சிவாஜி பிலிம்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்தார்.

ஆனால் இத்திரைப்படம் வெளிவந்து வரவேற்பை பெறவில்லை. வசூல் ரீதியாக மிகுந்த ஏமாற்றத்தை நடிகர் பிரபுவிற்கு கொடுத்தது. மேலும் இத்திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.

பிரபுவை காப்பாற்றிய ரஜினி

அசல் படத்திற்கு பிறகு மிகுந்த ஏமாற்றத்தில் இருந்த நடிகர் பிரபு, அதிக நஷ்டத்தை சந்தித்திருந்தார். அசல் படம் தோல்வியடைந்ததால் பெரும் நஷ்டம் அடைந்த பிரபுவிற்கு நடிகர் அஜித் கை கொடுக்கவில்லை. ஆனால் கடனில் இருக்கும் பிரபுவை காப்பாற்ற சிவாஜி புரொடக்ஷன் மூலம் பிரபு ரஜினிகாந்தை வைத்து சந்திரமுகி என்னும் படத்தை தயாரித்தார்.

Rajini

இந்தப் படம் ஒரு வருடம் மெகா ஹிட் கொடுத்தது. இதனால் அசல் படத்தில் தோல்வியுற்ற பிரபு சந்திரமுகி படத்தின் மூலம் திருப்தி அடைந்தார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top