ஹாரி பாட்டரில் நடித்த முக்கிய நடிகர் ராபி கோல்ட்ரேன் காலமானார் – கவலையில் ரசிகர்கள்

ஹாலிவுட் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த திரைப்படங்களில் முக்கியமான இடத்தை பிடித்த ஒரு திரைப்படம் என்றால் அது ஹாரி பாட்டார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொடர்ந்து 8 பாகங்களை வெளியிட்டு ஹாலிவுட் முதல் தமிழ்நாடு வரை அனைவரையும் பரபரப்பாக வைத்திருந்த ஒரு திரைப்படம்.

இந்த படத்தில் ஹாகிரிட் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் இன்று காலமானார். சமீபத்தில் உடல் நலகுறைவால் ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் நேற்று இயற்கை எய்தினார். தனது 72வது வயதில் அவர் காலமாகி உள்ளார்.

ஹாரி பாட்டர் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருந்தவர் ராபி கோல்ட்ரேன். பல ஹாலிவுட் பிரபலங்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Refresh