Connect with us

நாகேஷை சினிமாவில் வாழ வைத்த இயக்குனர்!.. ஆனால் கே பாலச்சந்தர் கிடையாது!.

actor nagesh

Cinema History

நாகேஷை சினிமாவில் வாழ வைத்த இயக்குனர்!.. ஆனால் கே பாலச்சந்தர் கிடையாது!.

Social Media Bar

Actor Nagesh : தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் மிகவும் பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். நாகேஷின் நடிப்பிற்கு அப்போது வெகுஜன மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் பெரும் நடிகர்கள் திரைப்படத்திலேயே நாகேஷிற்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது.

நாகேஷின் நடிப்பு திறமையை கண்டு அவரை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என ஆசைப்பட்டார் இயக்குனர் கே.பாலச்சந்தர். எனவே அவரை கதாநாயகனாக வைத்து பாலச்சந்தர் இயக்கிய சர்வர் சுந்தரம் பெரும் வரவேற்பை பெற்றது.

actor-nagesh
actor-nagesh

ஆனால் அதற்கு முன்பே சினிமாவில் நாகேஷை பிரபலமாக்கிய பெருமை இயக்குனர் ஸ்ரீதரைதான் சேரும். இயக்குனர் ஸ்ரீதர் முன்பே நாகேஷின் நகைச்சுவை திறனை அறிந்திருந்தார். எனவே அவர் இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் நாகேஷிற்கு வாய்ப்பு கொடுத்தார்.

அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதற்கு பிறகு ஸ்ரீதர் அவர் இயக்கிய போலீஸ்க்காரன் மகள் திரைப்படத்தில் சந்திரபாபு நாகேஷ் இருவரையும் நடிக்க வைத்தார். அதுவும் நாகேஷிற்கு முக்கியமான படமாக அமைந்தது. அதன் பிறகு ஸ்ரீதர் ஈஸ்ட்மென் கலரில் இயக்கிய காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் கதாநாயகனுக்கு அடுத்த கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்தார்.

இப்படி நாகேஷிற்கு அடையாளமாக அமைந்த திரைப்படங்களை எல்லாம் ஸ்ரீதர்தான் இயக்கினார். இவையே பின்னர் நாகேஷ் புகழின் உச்சிக்கு செல்ல காரணமாக அமைந்தன.

To Top