Connect with us

ரஜினி கூட்டணில படம் ஹிட் அடிச்சதுக்கு இதுதான் காரணம்!.. வேற யாரும் முயற்சி பண்ணாதீங்க ஆபத்து!. அட்வைஸ் செய்த சுரேஷ் கிருஷ்ணா!.

rajinikanth suresh krishna

Cinema History

ரஜினி கூட்டணில படம் ஹிட் அடிச்சதுக்கு இதுதான் காரணம்!.. வேற யாரும் முயற்சி பண்ணாதீங்க ஆபத்து!. அட்வைஸ் செய்த சுரேஷ் கிருஷ்ணா!.

Social Media Bar

தமிழில் முதல் படமே மாஸ் ஹிட் கொடுத்த இயக்குனர்கள் வரிசையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு முக்கிய இடமுண்டு. சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் பெரும்பாலான படங்கள் தமிழில் வெற்றி படங்களாகதான் அமைந்துள்ளன.

அந்த காலத்து லோகேஷ் கனகராஜ் என சுரேஷ் கிருஷ்ணாவை கூறலாம். ஆரம்பத்தில் ஹிந்தியில்தான் திரைப்படம் இயக்கி வந்தார் சுரேஷ் கிருஷ்ணா. ஹிந்தியில் சல்மான்கான் மற்றும் ரேவதியை வைத்து இவர் இயக்கிய திரைப்படம் லவ். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வர துவங்கின.

இதற்கு நடுவே தனது குருவான பாலச்சந்தரை அவர் பார்க்க வந்தப்போது பாலச்சந்தர்தான் அண்ணாமலை திரைப்படத்தில் வாய்ப்பை பெற்று கொடுத்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் பெரும் இயக்குனரானார் சுரேஷ் கிருஷ்ணா.

பொதுவாக இயக்குனர்கள் திரைப்படம் எடுப்பதற்கு முன்பு படத்திற்கான மொத்த வசனம் மற்றும் திரைக்கதை இரண்டையும் எழுதி வைத்துவிட்டுதான் படத்தை துவங்குவார்கள். ஆனால் சுரேஷ் கிருஷ்ணா விஷயத்தில் கதையே வேறு.

அண்ணாமலை படத்திலும் சரி, பாட்ஷா படத்திலும் சரி அவர் திரைப்படத்திற்கு திரைக்கதையையே எழுதவில்லை. நேரடியாக படப்பிடிப்பை துவங்கிவிட்டார். பொதுவாக எந்த ஒரு இயக்குனரும் அப்படி செய்ய மாட்டார்கள். ஆனால் அதுதான் தனது வெற்றியின் ரகசியம் என்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

To Top