News
சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் நிலைமை என்ன?.. புட்டு புட்டு வைத்த அஜித் பட நடிகை..
பொதுவாகவே சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகம் ஆகும் நடிகைகளுக்கு தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் என்பது குறைவாகதான் கிடைக்கின்றன.
ஏனெனில் அரிதாகவே கவர்ச்சி நடிகைகள் கிடைப்பதால் தமிழ் திரைப்பட துறையை சேர்ந்தவர்கள், தொடர்ந்து அந்த நடிகையை கவர்ச்சி நடிகை ஆக பயன்படுத்திக் கொள்ளலாம் நினைக்கின்றனர்.
அப்படியாக சினிமாவிற்குள் அறிமுகமாகி கவர்ச்சி நடிகை என்ற தோற்றத்தால் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தவர் நடிகை சோனா. பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலமாக இவர் திரைத்துறையில் அறிமுகமானார்.

பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடிக்கும் போது அதில் நல்ல கதாபாத்திரமாகதான் அவர் நடித்திருந்தார் ஆனால் அதற்குப் பிறகு அவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்தார். அதனை தொடர்ந்து அவருக்கு கமிட்டாகும் திரைப்படங்களில் எல்லாம் கவர்ச்சி கதாபாத்திரமாக நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக வந்தது.
சோனாவுக்கு வந்த கதாபாத்திரம்:
இந்த நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சோனா கூறும் பொழுது நான் நிறைய திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் இந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு வெறுப்பை ஏற்படுத்தி விட்டது. மேலும் கவர்ச்சி நடிகை என்கிற கட்டமைப்பை முதலில் உடைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் பல தயாரிப்பாளர்களிடம் கவர்ச்சி கதாபாத்திரமாக இல்லாமல் வேறு கதாபாத்திரம் வேண்டும் என்று நான் கேட்டிருக்கிறேன். ஆனால் யாருமே எனக்கு அப்படியான கதாபாத்திரத்தை கொடுக்கவில்லை.
தொடர்ந்து அவர்கள் கவர்ச்சி கதாபாத்திரமாகவே கொடுத்து வந்தனர் எனவே கவர்ச்சி அடையாளத்தை உடைப்பதற்கு சீரியல் தான் மாற்றாக இருக்கும் என்று நினைத்தேன். எனவே சின்னத்திரையில் வாய்ப்புகளை தேடினேன். சின்னத்திரையில் எடுத்த உடனேயே அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தான் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.
சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்:
ஏனெனில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாகதான் எளிமையாக கவர்ச்சி நடிகை என்கிற பிம்பத்தை உடைக்க முடியும் என்று நினைத்தேன் நான் சினிமாவில் நுழைந்த பொழுது திரைத்துறையில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது அதிகமாக இருந்து வந்தது.
ஆனால் இப்பொழுது அதன் நிலை இன்னும் மோசமாகிவிட்டது என்று தான் கூற வேண்டும் முன்பை விட இப்பொழுது விஷயங்கள் சினிமாவில் இயல்பாகிவிட்டது. ஆனாலும் அது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட முடிவை சேர்ந்தது என்று கூறி இருக்கிறார் நடிகை சோனா.
