கலைஞர் பேரங்குறதுக்காக எல்லாம் படம் பண்ண முடியாது!.. ஸ்ட்ரிக்டாக மறுத்த இயக்குனர்!.. பாண்டிராஜ் கொஞ்சம் டெரர்தான் போல!..

pandiraj arulnithi: பசங்க திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாண்டிராஜ். சிம்பு தேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.

ஆனால் அவர் எழுதி வைத்திருந்த பசங்க திரைப்படத்தின் கதையை பலரும் மறுத்துள்ளனர். முக்கியமாக இயக்குனர் சங்கர் கூட இந்த படத்தை தயாரிக்க மறுத்துவிட்டார். ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் தேசிய விருதுகளையும் இந்த திரைப்படம் பெற்றது. இதனை அடுத்து பாண்டிராஜுக்கு அதிகமான பட வாய்ப்புகள் வரத் துவங்கின இந்த நிலையில் சில பிரபலங்கள் மூலமாக ஒரு நபர் இவருக்கு தெரிய வந்தார் அவர் வேறு யாரும் அல்ல கலைஞர் மு கருணாநிதியின் பேரனான அருள்நிதிதான்.

Social Media Bar

அருள் நிதி அப்பொழுது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையில் இருந்தார். எனவே அவர் பாண்டியராஜை வந்து சந்தித்து இந்த மாதிரி என்னை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா? என கேட்டுள்ளார் ஆனால் அருள்நிதி பார்க்க மிகவும் வெள்ளையாக இருந்தார்.

எனவே நீங்கள் மணிரத்தினம் அல்லது கௌதம் மேனன் திரைப்படத்தில் நடிப்பதற்குதான் சரியாக இருப்பீர்கள் என் படத்தில் உங்களை நடிக்க வைக்க முடியாது என நேரடியாக கூறிவிட்டார் பாண்டியராஜ்.

அதன் பிறகு வெகுநாட்கள் கழித்து வம்சத்தின் கதையை ஒருநாள் கூறிக் கொண்டிருந்த பொழுது அதை கேட்ட அருள்நிதி, சார் இந்த கதை நல்லா இருக்கு சார் என்று கூறியுள்ளார். பிறகு அதை அருள்நிதி வைத்து எடுக்க வேண்டும் என்றால் முதலில் அருள் நிதியை கிராமத்து ஆள் போல மாற்ற வேண்டும் என்பதற்காக அவருக்கு மீசை தாடியெல்லாம் தேங்காய் எண்ணெய் தடவி வளர வைத்து கிராமத்து ஆள் போல மாற்றி பிறகு வம்சம் திரைப்படத்தை எடுத்துள்ளார் பாண்டியராஜ். இந்த நிகழ்வை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.