Connect with us

கையெழுத்து வாங்குறேன்னு சொத்தை எழுதி வாங்கிட்டீன்னா என்ன பண்றது!.. ரசிகரை உஷாராக டீல் செய்த நாகேஷ்!.

nagesh

Cinema History

கையெழுத்து வாங்குறேன்னு சொத்தை எழுதி வாங்கிட்டீன்னா என்ன பண்றது!.. ரசிகரை உஷாராக டீல் செய்த நாகேஷ்!.

Social Media Bar

.Actor Nagesh: தமிழ் சினிமா திரை கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் தனக்கென தனி உடல் மொழியை கொண்டு நாகேஷ் அனைவரது மனதிலும் நல்ல இடத்தை பிடித்தார்.

நாகேஷின் காமெடிக்காகவே மக்கள் திரைப்படங்களை பார்க்க வந்தனர், இதனால் பெரும் நடிகர்கள் திரைப்படங்களில் தொடர்ந்து நடிகர் நாகேஷிற்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வந்தன. இந்த நிலையில்தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருவதால் கதாநாயகனாக நடிக்கலாம் என முடிவு செய்தார் நாகேஷ்.

அப்படி அவர் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் சர்வர் சுந்தரம். ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி நடிகராக நாகேஷால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என நிரூபித்த திரைப்படம் சர்வர் சுந்தரம்.

நாகேஷ் பிரபலமான பிறகு அவரை சந்திக்க ரசிகர்கள் வருவது என்பது வாடிக்கையான ஒரு விஷயமானது. அப்படி வரும் ரசிகர்களுக்கு முடிந்தவரை அனுமதி கொடுத்து பேசுவார் நாகேஷ். அப்படியாக ஒருமுறை ரசிகர் ஒருவர் நாகேஷிடம் கையெழுத்து வாங்க வந்தார்.

அங்கு வந்தப்போது அவரிடம் கையெழுத்து வாங்க பேப்பர் எதுவும் கையில் இல்லை. எனவே கீழே கிடந்த பேப்பரை எடுத்து அதை நாகேஷிடம் கொடுத்து ஆட்டோகிராஃப் போட்டு தருமாறு கூறினார். நாகேஷ் அந்த பேப்பரை பின்பக்கம் திருப்பி பார்த்தப்போது அதில் கொடுக்க வேண்டிய கடன் தொகை என ஒரு லிஸ்ட் போடப்பட்டிருந்தது.

அதை பார்த்த நாகேஷ் முன்பக்கத்தில் “இந்த நபருக்கு கொடுக்க வேண்டிய கடன்களை நான் கொடுத்துவிட்டேன். இப்படிக்கு நாகேஷ்” என எழுதி கொடுத்துள்ளார். அப்போது இந்த விஷயம் பிரபலமாக பேசப்பட்டது.

To Top