Connect with us

எனக்கு பேமஸான காமெடியெல்லாம் மாரிமுத்துதான் எழுதி தந்தாரு!.. ஓப்பன் டாக் கொடுத்த வடிவேலு…

Cinema History

எனக்கு பேமஸான காமெடியெல்லாம் மாரிமுத்துதான் எழுதி தந்தாரு!.. ஓப்பன் டாக் கொடுத்த வடிவேலு…

Social Media Bar

வெகு காலத்திற்கு பிறகு தமிழ் டிவி சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. 1990 களில் தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் ஆக வேண்டும் என்னும் ஆசையில் வந்தவர் மாரிமுத்து.

ராஜ்கிரணில் துவங்கி பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இவர் பணிப்புரிந்துள்ளார். 2008 ஆம் ஆண்டு இவர் கண்ணும் கண்ணும் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

அதன் பிறகு மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரத்திற்கு அதிக வரவேற்பை பெற்றதை அடுத்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.

போன வருடம் சன் டிவியில் ஒளிப்பரப்பான எதிர்நீச்சல் சீரியலில் அவர் நடிக்க துவங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். சில நாட்களுக்கு முன்பு மாரிமுத்து இயற்கை எய்தினார்.

இந்த நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்த வடிவேலு, அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்க, கிணத்தை காணோம் போன்ற நான் நடித்த பிரபலமான காமெடிகளை உருவாக்கி தந்தவர் மாரிமுத்து அவர் இறந்தது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது என வடிவேலு கூறியுள்ளார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top