Tamil Cinema News
வேற ஏதாச்சும் பேசலாமா..! அஜித் விஜய் பற்றிய கேள்வியால் கடுப்பான வடிவேலு..!
தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் வடிவேலு. சமீப காலங்களாக வடிவேலுவுக்கு வாய்ப்புகள் என்பது அவ்வளவாக கிடைப்பதில்லை. இறுதியாக அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.
அதுவரை காமெடியாக நடித்து வந்த வடிவேலு அந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து நிறைய சீரியஸான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன.
ஆனாலும் கூட மீண்டும் காமெடி நடிகராக நடிக்க வேண்டும் என காமெடி கதை களங்களை தேடி நடித்து வருகிறார் வடிவேலு. அந்த வகையில் தற்சமயம் சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படம் என கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து அடுத்து பிரபுதேவாவுடன் ஒரு திரைப்படத்தில் இவர் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் சில கேள்விகளை கேட்டனர்.
அதில் விஜய் இப்போது அரசியலுக்கு சென்றுவிட்டார். விஜய்யின் இடத்தை நீங்கள் பிடிப்பீர்களா என கேட்டனர். அதற்கு பதிலளித்த வடிவேலு வேறு கேள்வி இருந்தால் கேளுங்கள் என்றார். பிறகு அஜித்திற்கு ரேஸில் விபத்து ஏற்பட்டது குறித்து கேட்கப்பட்டது அதற்கும் வடிவேலு பதிலளிக்கவில்லை.
எனவே இந்த பேட்டியானது வைரலாகி வருகிறது.