Connect with us

சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த 12th fail நடிகர்..இதுதான் காரணம்..!

vikranth messay

Tamil Cinema News

சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த 12th fail நடிகர்..இதுதான் காரணம்..!

பாலிவுட்டில் இருந்து இந்திய அளவில் பிரபலமான திரைப்படங்கள் மிக குறைவானவைதான் இருந்து வருகின்றன. ஏனெனில் பெரும்பாலும் பாலிவுட் சினிமாவிற்கு தென் இந்திய அளவில் பெரிதாக வரவேற்பு கிடைப்பது கிடையாது.

ஆனால் தென்னிந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் இந்திய அளவில் வரவேற்பை பெற்றிருக்கின்றன. கே ஜி எஃப், ஆர் ஆர் ஆர், புஷ்பா போன்ற திரைப்படங்கள் எல்லாம் இந்திய அளவில் வரவேற்பை பெற்ற படங்களாக இருக்கின்றன.

ஆனால் வட இந்தியாவில் எடுத்த பெரும்பான்மையான படங்களுக்கு தென்னிந்தியாவில் வரவேற்பு கிடைத்தது கிடையாது. இருந்தாலும் அப்படி ஓடிடி மூலமாக மட்டுமே வரவேற்பை பெற்ற திரைப்படம் 12th fail.

நடிகர் விக்ராந்த்:

அரசு அதிகாரி மனோஜ் ஷர்மாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விக்ராந்த் மெசே என்பவர் நடித்திருந்தார். இவர் பிறகு கிரிமினல் ஜெஸ்டிஸ். மிர்சாபூர் மாதிரியான டிவி சீரியஸில் நடித்ததன் மூலமாக இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

இப்படி வளர்ந்து வரும் நடிகராக இருந்து வரும் விக்ராந்த் மெசே தற்சமயம் சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்திருப்பது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவைப் பொறுத்தவரை அங்கு வாரிசு நடிகர்களுக்குதான் எப்போதும் வரவேற்பு உண்டு. அதனால் அவருக்கு வரவேற்பு இல்லாமல் போய் இருக்கலாம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

shruthika
biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
To Top