Connect with us

இதெல்லாம் தெரிஞ்சா இங்க ஹீரோயின் ஆக முடியாது!.. அனுஷ்காவில் துவங்கி அனைத்து நடிகைகளையும் வச்சி செய்த நடிகை ஆர்த்தி!..

aarthi anushka

News

இதெல்லாம் தெரிஞ்சா இங்க ஹீரோயின் ஆக முடியாது!.. அனுஷ்காவில் துவங்கி அனைத்து நடிகைகளையும் வச்சி செய்த நடிகை ஆர்த்தி!..

Social Media Bar

Actress Aarthi : தமிழ் சினிமாவில் சிறுவயது முதல் நடித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஆர்த்தி. தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் வரும் ஆர்த்தி குழந்தை நட்சத்திரமாக வண்ண கனவுகள் என்கிற திரைப்படத்தில் 1987இல் அறிமுகமானார்.

அதற்குப் பிறகு என் தங்கை கல்யாணி தென்றல் சுடும் என்று சில திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரத்திலேயே நடித்திருந்தார். பிறகு 2004 இல் வந்த அருள் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு கிரி, மாயாவி போன்ற சில திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆர்த்தி. இப்போது வரை நிறைய திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார். ஆனால் சினிமாவிற்கு வந்த பொழுது கதாநாயகியாக வேண்டும் என்பதுதான் தன்னுடைய ஆசையாக இருந்தது என்று ஒரு பேட்டியில் கூறுகிறார் ஆர்த்தி.

அதில் அவர் கூறும் பொழுது எதனால் தன்னை கதாநாயகியாக தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறித்து அவர் பேசும் பொழுது தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ் தெரிந்திருந்தால் நீங்கள் கதாநாயகியாக முடியாது. தமிழ் தெரியாத வேற்று மொழி ஆட்களைதான் இங்கு கதாநாயகி ஆக்குவார்கள்.

மேலும் எனக்கு நடிக்க வேறு தெரியும் நடிக்க தெரிந்தால் எப்படி கதாநாயகியாக முடியும். அதனால் என்னால் கதாநாயகியாக ஆகவே முடியவில்லை என்று கூறி இருக்கிறார் ஆர்த்தி. அதன் மூலமாக தமிழில் இருக்கும் அதிகபட்ச கதாநாயகிகள் நடிக்க தெரியாதவர்கள் என்பதாக கூறுகிறார் ஆர்த்தி. மேலும் தமிழ் மொழி தெரிந்த நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார் அதுவும் ஒரு வகையில் உண்மை தானே என்று இதற்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

To Top