என் நண்பன் பண்ணுன வேடிக்கையை படத்தில் வச்சேன்!.. ஹிட் ஆயிட்டு!.. நாகேஷை புகழடைய வைத்த காட்சி!.
Actor Nagesh : காமெடி நடிகர்களுக்கு அடையாளமாக சில காட்சிகள் எப்போதுமே இருக்கும். ஆனால் நடிகர் வடிவேலுவை பொறுத்தவரை நாம் அப்படி கூறி விட முடியாது. அவருக்கு அந்த மாதிரி எக்கச்சக்கமான காட்சிகள் இருக்கும்.
ஆனால் பழைய நடிகர்களுக்கு அடையாளமாக சில காட்சிகள் இருப்பதுண்டு உதாரணமாக நாகேஷை பொறுத்தவரை தனித்துவமான சில காட்சிகளை கூறலாம் என்றால் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் அவர் தனது தந்தைக்கு பேய் கதை சொல்லும் காட்சி ஒன்று இருக்கும்.
அந்த காட்சி இப்போதும் கூட பிரமாதமாக பேசப்படுவது காட்சியாக இருக்கும். அந்த காட்சி எப்படி அமைந்தது என்பதை குறித்து அந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீதர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஒரு முறை அவரது நண்பர் ஒருவர் ஸ்ரீதரிடம் பேய் கதை ஒன்றை கூறுவதற்கு வந்தாராம்.

அப்படி வரும்பொழுது அதில் பேய் வரும் காட்சிகளை அவர் கூறும் பொழுது அவரே பயந்து கொண்டு சற்று சாந்தமான குரலில் அந்த பேய் வரும் காட்சிகளை கூறினாராம். அவர் அப்படி அந்த காட்சிகளை கூறும் பொழுது தனக்கே கொஞ்சம் பயமாக இருந்ததாக ஸ்ரீதர் கூறுகிறார்.
இதனை அடுத்து தனது திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சியை வைத்தால் என்ன என்று யோசித்த ஸ்ரீதர் அதை நாகேஷிடம் கூறி காட்சியாக்கி உள்ளார் அதற்கு பிறகு பிரபலமான அந்த காட்சியை இப்போது வரை மக்கள் மத்தியில் தனித்துவமாக இருக்கிறது.