படம் ஓடுணாதான் அடுத்த பாகம் விடுவேன்? – அவதார் இயக்குனரின் திடீர் அறிக்கை!

உலகில் முதன் முதலாக மாபெரும் பொருட் செலவில் உருவாகி 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். இந்த படம் வந்த காலங்களில் அநேகமாக 90ஸ் கிட்ஸ்கள் பள்ளிகளில் படித்திருக்க கூடும்.

அப்போதே உலக அளவில் பெரும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்த திரைப்படம் இது. இந்த படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவதாரை 5 பாகங்களாக எடுக்கலாம் என முடிவெடுத்தார். அதற்கான வேலைகள்தான் இத்தனை வருடங்களாக நடந்து வந்தன.

வருகிற டிசம்பர் 16 அன்று அவதாரின் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது, அதன் மூன்றாம் பாகத்தின் வேலைகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவதார் 2 ஆம் பாகம் நன்றாக ஓடினால்தான் நான்காம், ஐந்தாம் பாகங்களை வெளியிடுவோம் என ஜேம் கேமரூன் கூறியுள்ளராம்.

அதாவது 2009 இல் வெளியான அவதார் முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் அதிக வசூல் செய்ய வேண்டும் என படக்குழு தரப்பில் கூறியுள்ளனர்.

அவதார் முதல் பாகம் வந்தபோது பள்ளிகளில் படித்த 90ஸ் கிட்ஸ் பலருக்கும் அந்த படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்கு கொடுத்து வைக்கவில்லை. எனவே அவர்கள் அவதார் இரண்டாம் பாகத்தையாவது திரையரங்கில் பார்க்க வேண்டும் என ஆசையில் உள்ளனர்.

எனவே கண்டிப்பாக அவதார் முதல் பாகத்தின் வசூலை இரண்டாம் பாகம் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Refresh