தளபதி எப்போ தலைவர் ஆவார்? குடைந்த நெல்சன்! – எஸ்கேப் ஆன விஜய்!

பீஸ்ட் பட வெளியீட்டை முன்னிட்டு நடந்த தொலைக்காட்சி பேட்டியில் நெல்சன் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் விஜய் பதிலளித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது. வழக்கமாக விஜய் படம் ரிலீஸாகும் முன்னே அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா உள்ளிட்டவை நடக்கும். ஆனால் இந்த படத்திற்கு அப்படியான நிகழ்ச்சி ஏதும் நடைபெறாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில் இயக்குனர் நெல்சன் விஜய்யை […]
விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பீஸ்ட் குழுவினர் கொண்டாட்டம்

நாளை மறுநாள் பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் பீஸ்ட் திரைப்பட குழுமம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. தளபதி விஜய் நடித்து தற்சமயம் அதிக எதிர்பார்ப்புடன், வெளியாக இருக்கும் திரைப்படம் பீஸ்ட், நெல்சன் இயக்கும் இந்த திரைப்படமானது வரும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பட குழுவினர் ஏதோ செலபரேஷனுக்கு செல்வது போன்ற வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் விஜய் காரை ஓட்டி கொண்டுள்ளார். காரில் பூஜா ஹெக்தே, நெல்சன் ஏனைய […]
விஜய் படத்திலிருந்து விலகிய இயக்குனர்! காரணம் இந்த நடிகரா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் “தளபதி 66” படத்திலிருந்து பிரபல இயக்குனர் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கு விஜய்யின் அடுத்த படமான “தளபதி 66”க்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் நிலையில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இயக்குனர் வம்சியின் முந்தைய தமிழ் படமான தோழா படத்திற்கு இயக்குனர் ராஜூ […]
பீஸ்ட் படத்திற்கு கத்தாரில் தடை! ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் நடித்து வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படத்திற்கு கத்தாரில் தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் பீஸ்ட் வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பீஸ்ட் வெளியாகும் நிலையில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பலரும் பீஸ்ட் […]
அண்ணாச்சியின் ஆட்டம் ஆரம்பம்! வைரலாகும் மொசலு மொசலு பாடல்!

அருள் சரவணன் நடித்து வெளியாகவுள்ள லெஜண்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் லெஜண்ட். இந்த படத்தில் விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் படங்களுக்கு இசையமைத்து நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையில் இந்த படத்தில் இசையமைப்பது அவருக்கு கம்பேக்காக இருக்கலாம் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் நேற்று லெஜண்ட் படத்தின் […]
போலீஸே இவ்வளவு கொடுமை அனுபவிக்கிறாங்களா? – டாணாக்காரன் விமர்சனம்!

விக்ரம் பிரபு நடித்து ஓடிடியில் வெளியாகியுள்ள டாணாக்காரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரம் பிரபு நடித்து தமிழ் இயக்கி வெளியாகியுள்ள படம் டாணாக்காரன். இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. விக்ரம் பிரபுவின் முந்தைய படங்கள் அவ்வளவு நல்ல வரவேற்பை பெறாத நிலையில் இந்த படம் சிறப்பான விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. 1990களிம் நடக்கும் கதை. காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் பயிற்சியில் உள்ளவர்கள் மீது ஏவப்படும் அதிகாரம், […]
பீஸ்ட் காப்பியா..இல்லையா..? பாத்து தெரிஞ்சிக்கோங்க! – நெல்சன் நெத்தியடி பதில்!

பீஸ்ட் திரைப்படம் வேறு ஒரு படத்தின் காப்பி என பரப்பப்படும் தகவல்களுக்கு இயக்குனர் நெல்சன் பதிலளித்துள்ளார். விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் முன்பதிவுகள் முழுவதும் முடிந்துள்ளது. ரசிகர்கள் பீஸ்ட் ரிலீஸை முன்னிட்டு பேனர்கள், போஸ்டர்கள் என […]
போன பார்ட் அளவுக்கு இல்ல..! வேற லெவலா இருக்கு! – Fantastic Beast விமர்சனம்!

ஹாலிவுட்டின் பிரபல மாயாஜால படமான ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட் படம் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடையே இருவேறு கருத்துகளையும் பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் ஹாரிபாட்டர் புத்தகங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் ஜே.கே.ரோலிங். இவரது ஹாரி பாட்டர் கதைகள் படமாக எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நிலையில் அதன் முன்கதையாக உருவாக்கப்பட்டு வெளியாகி வருகிறது பெண்டாஸ்டிக் பீஸ்ட் பாகங்கள். முன்னதாக வெளியான இரண்டு பாகங்களில் ஆல்பஸ் டம்பிள்டோர், கிரிண்டல்வால்ட் இடையே உள்ள ரத்த ஒப்பந்தம் குறுத்தும், இந்த விவகாரத்தில் மாய […]
தனுஷ் பட நடிகை வீட்டில் நகைகள் கொள்ளை! – மொத்த மதிப்பு இவ்வளவா?

தனுஷுடன் “அம்பிகாபதி” படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை சோனம் கபூர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் சோனம் கபூர். இந்தியில் பிரபல நடிகரான அணில் கபூரின் மகளான இவர் இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். தனுஷுடன் “அம்பிகாபதி” என்ற படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் திருமணமான சோனம் கபூர் நடிப்பத்தில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். தற்போது அவர் கர்ப்பமாகவும் உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் […]
அமெரிக்காவில் பீஸ்ட் முன்பதிவு மும்முரம்..! – இவ்வளவு வசூலா..?

விஜய் நடித்து வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படத்திற்கு அமெரிக்காவில் மும்முரமாக முன்பதிவு நடந்து வருகிறது. விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் பீஸ்ட் வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பீஸ்ட் வெளியாகும் நிலையில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பலரும் பீஸ்ட் […]
10 வருஷத்துக்கு ஆஸ்கர் நினைப்பே கூடாது..! – வில் ஸ்மித்திற்கு தண்டனை!

ஆஸ்கர் விருது விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த விவகாரத்தில் நடிகர் வில் ஸ்மித்திற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட்டின் மிக பிரபலமான ஆஸ்கர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் “கிங் ரிச்சர்ட்ஸ்” படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் பெற்றார். ஆஸ்கர் விருது விழாவினை தொகுத்து வழங்கிய காமெடி நடிகர் க்றிஸ் ராக் நகைச்சுவையாக வில் ஸ்மித்தின் மனைவியை கிண்டல் செய்ய ஆத்திரமடைந்த வில் ஸ்மித் அவரை மேடையிலேயே […]