அரக்கர்களை அழிக்கும் இளம் மாணவ படை – ஜுஜுட்சு கைசன் தொடர் – ஒரு அறிமுகம்

உலகம் முழுவதும் தீய அரக்கர்கள் நிரம்பி உள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு கண்களுக்கு அவர்கள் தெரிவதில்லை. இந்த தீய அரக்கர்கள் பல மனிதர்களை கொன்று அழிக்கின்றன.

இந்நிலையில் இந்த அரக்கர்களிடம் இருந்து மனிதர்களை காக்கும் ஒரு குழுதான் இந்த ஜூஜுட்ஸி சார்சரஸ் குழு.

அனைத்து அரக்கர்களுக்கும் பொதுவாக இருக்கக்கூடிய ஒரு விஷயம் சாப சக்தி. அரக்கர்களை போலவே ஜுஜுட்சு மாணவர்களுக்கும் கூட சாப சக்திகள் இருக்கும்.

சொல்ல போனால் யார் கண்களுக்கு எல்லாம் இந்த அரக்கர்கள் தெரிகின்றனவோ அவர்கள் எல்லாரும் ஜுஜுட்சு சார்சரர் ஆக முடியும். அரக்கர்களை போலவே இவர்களுக்கும் சாப சக்தி இருக்கும்.

இந்த சாப சக்திகள் அனைத்திற்கும் தலைமையாய் இருப்பவன் ரியாமென் சுகுனா என்னும் அரக்கன். ஆனால் அவனது சக்திகள் 10 விரல்களுக்கு கடத்தப்பட்டு அந்த 10 விரல்களும் காணாமல் போய்விடும்.

கதையின் நாயகன் யூஜி இடாதாரி. இவன் ஒரு சாதரண மனிதன்தான். ஆனால் எப்படியோ ரியாமென்னின் சக்தி கொண்ட ஒரு விரல் இவனுக்கு கிடைத்துவிடும். அதை தேடி அரக்கரக்ள் யூஜியை தேடி வந்து அவனை தாக்குவார்கள். இதனால் பயந்த யூஜி அந்த விரலை வாயில் போட்டு விழுங்கிவிடுவான். இவ்வளவு நாள் அழிந்து இருந்த ரியாமென் சுகுணா, இதனால் யூஜியின் உடலில் உயிர்பெற்று விடுவான்.

இதனால் கதாநாயகன் ஈருடல், ஓருயிராக மாறிவிடுவான். இந்த விஷயத்தை அறிந்த டோக்கியோ ஜுஜுட்ஸி ஹை ஸ்கூல் இவனை மாணவாக சேர்த்து கொள்வார்கள். ஏனெனில் சரியான பயிற்சி இருந்தால் மட்டுமே ரியாமென் சுகுணாவை கதாநாயகனால் கட்டுப்படுத்த முடியும்.

இந்த நிலையில் அதிகமான சக்திகள் கொண்ட ஒரு அரக்கர் குழு மனிதர்களை அழித்து கொண்டிருக்க அவைகளுக்கு எதிராக ஜூஜுட்ஸி குழு உருவாவதே கதை.

இந்த சீரிஸ் ஜாப்பனிஸ் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh